வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையாம்!இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!
கொரோனா உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என கூறியுள்ளது.வட கொரியாதான் அந்த நாடு.
வடகொரியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையை சரியாக கூறவில்லை என உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில்.வடகொரிய சுகாதாரத்துறை நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என தற்போது தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து 23,121 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.