முழு ஊரடங்கு வதந்தியே,சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்
கொரோனா பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சில மாநிலங்களில் இரவுநேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் வதந்தியே என கூறியுள்ளார்.தற்போது மீண்டும் அந்த பகிர்வுகள் வதந்தியே அது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.