கொரோனா பாதித்த கனிமொழி விடு திரும்பினார்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையில் திமுக எம்.பி கனிமொழி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி அவர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தோன்றியதால், சென்னைக்கு வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு தொற்றுபாதிப்பு உறுதியாகவே, நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று கொரோனா கவச உடையில் வந்து 6 மணிக்கு மேல் வாக்களித்து விட்டுச் சென்றார்.

இந்நிலையில், இன்று பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. வீடு திரும்பினாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி, ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *