இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் கொரோனா! மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மட்டும் 96,982 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 146 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த மார்ச் 8ம் தேதி முதல் அன்றாட தொற்று பாதிப்பு மற்றும் மரணத்தின் எண்ணிக்கை 345 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்து வரும் 4 வாரங்களில் பாதிப்பு உச்சகட்டத்தை அடையும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.