திரிபுரா முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனாலும் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொரோனா பரவல் ஏற்படுவது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். தயவுசெய்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *