18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பம் முதலே அமெரிக்காவில் பரவல் அதிக அளவில் காணப்பட்டு வந்தது.உலக அளவில் பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக விளங்கும் அமெரிக்காவையே கொரோனா ஆட்டிப்படைத்தது.

கொரோனா பரவலின் ஆரம்பத்தில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் பெருந்தொற்றை சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.இந்நிலையில்,ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது.

இன்று அதிபர் பைடன் வரும் ஏப்ரல் 19 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.இந்த முயற்சி அமெரிக்காவை பொருளாதார சரிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *