அரசு, தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதி

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவில் அரசு,தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்தலாம்; வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது உள்ள வேகத்தைக் காட்டிலும் அதிகரிக்கக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *