முதன்முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,25,89,067 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் கரோனா தொற்றுக்கு மேலும் 478 போ பலியாகினா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,65,101 -ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுதும் 7,41,830 போ சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கொரோனாவிலிருந்து இன்று 52,847 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,16,82,136 போ குணமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 24.90 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இதன்மூலம், தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *