தேர்தலுக்குப் பின்னான ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதா கிருஷ்ணன்

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் வேறு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது, “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது உண்மை தான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பொது முடக்கம் என்பது வதந்தி தான். அதனை யாரும் நம்ப வேண்டாம்.

மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டும் போதும். தேர்தல் சுமூகமாக நடைபெற சுகாதாரத் துறை சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *