கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் – தலைமை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் கொரோனா பரவல் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என தமிழ்நாடு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *