முழு ஊரடங்குக்கு வாய்ப்பு அதிகம் – உத்தவ் தாக்ரே

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் தனது கோர தாண்டவத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் தான் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.23 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதிகரிக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் தனியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமானால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  249 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *