டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.தலைநகர் டெல்லியிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தியுள்ளது.இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில்,நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.