உத்தரபிரதேசத்தில் பள்ளிகளை மூட உத்தரவு

கொரோனா பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,சில மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.தற்போது உத்திரபிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்புகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் நடுநிலை வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை எனவும் அரசு அறிவித்துள்ளது.