நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. இதன் படி, தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைநோய்கள் இருப்போர், இல்லாதவர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.