தயவு செய்து முகக்கவசம் போடுங்கள் – ராதா கிருஷ்ணன் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பரப்புரைகளுக்கு தடை போட முடியாது. மக்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.