விமான நிலையத்தில் கொரோனா விதிமுறையை மீறினால் உடனடி அபராதம்
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து சில மாநிலங்களில் மீண்டும் பொதுக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது புதிய உத்தரவு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை மீறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என சுற்றறிக்கை ஒன்றை அனைத்து விமான நிலையங்களுக்கும் விமான இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு உருமாறிய கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.