தேர்தல் முடிந்த பிறகு மருத்துவக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் – மாநகராட்சி ஆணையர்

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றுகள் 2000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.இதனையடுத்து,சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றக்கூறி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க,மற்றொரு புறம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியும் பரவி வருகிறது.
இந்நிலையில்,தற்போது தேர்தல் முடிந்த பிறகு மருத்துவக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.மேலும்,தேர்தல் முடிந்த பிறகு முழு வீச்சுடன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் எனவும் கூறினார்.