படிப்படியாக ஊரடங்கு அமலாகும் – ராதா கிருஷ்ணன்

தமிழகத்தின் கொரோனாவின் கோர தாண்டவம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 2,194 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,79,463 ஆக உயர்ந்துள்ளது.

 இந்த 2,194 பேர்களில் 833 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலி எண்ணிக்கையும் 12,670 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, பேசிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன, “  மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. சென்ற ஆண்டு கொரோனா நோய்க்கு எந்த மருந்தும் இல்லாமல் இருந்ததால், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மட்டுமே ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது தடுப்பூசி வந்து விட்டது. அதேசமயம் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *