தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கா?

உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் தீவிரமாகியுள்ளன.

தினசரி கொரோனா பாதிப்பு 500, 1000 என அதிகரித்து தற்போது இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 4 ஆம் மற்றும் 5-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுப்போக்குவரத்தில் மாற்றம், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *