தனியார் மனநல காப்பகத்தைச் சேர்ந்த 46 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 500, 600 என்ற நிலையில் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் மாவட்டம் மந்தாரம்புதூர் என்ற இடத்தில் மனோலய என்ற மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை நடத்தி வரும் நிர்வாகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நிர்வாகிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மனநல காப்பகத்தில் இருந்த 80 க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . அதில், 46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது .

இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *