தஞ்சையில் மேலும் 15 மாணவர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.சென்னை,காஞ்சிபுரம்,கோவை,தஞ்சை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
தஞ்சையில் ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா அதிகரித்து வந்தது.
இந்நிலையில்,தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 5 கல்லூரிகளில் இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.