மாஸ்க் அணியாததே கொரோனா பரவலுக்கு காரணம் – ராதா கிருஷ்ணன்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் “ கொரோனா பரவல் குறைந்ததும் மக்கள் அலட்சியமடைந்துள்ளனர். மாஸ்க் போடுவதையே மறந்து விட்டனர். மக்கள் மாஸ்க் போடுவதை மறந்து விட்டதே கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம்.

தமிழகத்தில் இன்னும் ‘Double Murant’ வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளதால் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளது.

எனவே, மாஸ்க் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது. தமிழகத்தில் இதுவரை 25 லட்சம் தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளோம். இன்னும், 10 லட்சம் தடுப்பூசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்படுத்தப்பவுள்ளது” என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *