மினி ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் – ராதா கிருஷ்ணன்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு கொரோனாவை கட்டுபடுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதுகாப்பு அதிகமான மாநிலங்களில் அந்த அரசுகளே நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

தமிழகத்திலும் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, சுகாதார துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, “அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு என அந்தந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். மக்கள் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *