புதுச்சேரியிலும் அதிகரிக்கும் கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் ஓராண்டைக் கடந்து இன்னும் முடியவில்லை. கடந்த சில மாதங்களில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், தினசரி பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், புதுச்சேரியிலும் ஒரு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 100 -க் கடந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாகத் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கடந்த நவ.11-ம் தேதி ஒரே நாளில் 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதன்பிறகு நூற்றுக்கும் குறைவான நபர்களே தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். 133 நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 100 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், இன்று 2,124 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் 87 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 6 பேர், மாகேவில் ஒருவர் என மொத்தம் 126 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *