சென்னை மக்களே ஜாக்கிரதை!
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 11 நாட்களில் சென்னையில் புதிதாக 3,907 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1015 பேருக்கும், கோவையில் 886 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 637 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 508 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 321 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 285 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வணிக வளாகங்கள், காய்கறிக்கடைகள், மற்றும் பழக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.