வடமாநிலங்களில் அமலாகிறது இரவுநேர ஊரடங்கு

உலகத்தையே சுற்றி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக, வடநாடுகளில் கொரோனா வைரஸின் தினசரி பாதிப்பு ஆயிரங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதனால், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் மற்றும் அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவாவில் பொழுது போக்கு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் கொரோனா விதிமுறைகளை முறையாக எந்த சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *