குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனையை தொடங்கியது மாடர்னா
அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் மாடர்னா குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதை தற்போது தொடங்கியுள்ளது.இதில் 6 வயது முதல் 12 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த சோதனையில் 6750 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர்.இந்த சோதனையின் முடிவில் மாடர்னா தடுப்பூசி இளம் வயதினர் மீது எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரிய வரும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் பன்சால் தெரிவித்தார்.