பப்புவா நியூ கினியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

பப்புவா நியூ கினியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.குறிப்பாக தலைநகர் போர்ட் மோர்ஷ்பியில் புதிதாக தொற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.நாட்டின், பாதிக்கும் அதிகமான தொற்றுகள் தலைநகர் போர்ட் மோர்ஷ்பியிலிருந்தே வருகின்றன.இதனையடுத்து பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரப்பி இது குறித்து அறிவியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.மேலும் நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.