ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா தொற்று தொடக்கம் ..!! மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை ..!!
ஜெர்மனில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ராபர்ட் கோச் நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.
ராபர்ட் கோச் நிறுவனத் தலைவரான லொத்தர் வீலர் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் கிடைத்ததாக கூறியுள்ளார்.ஜெர்மனியில் கொரோனா தொற்று கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாகவும் இந்த தொற்று சென்ற வாரம் வியாழக்கிழமையை விட 2400 பேருக்கு அதிகமாக பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது .
புதன்கிழமை நிலவரப்படி ஒரு வாரத்தில் 1,00,000 பேருக்கு 65.4 பேர் என இருந்த தொற்று வீதம் வியாழக்கிழமை அன்று 1,00,000 பேருக்கு 69.1 ஆக அதிகரித்துள்ளது .மேலும் இந்த திடீர் மாற்றமடைந்த தொற்றால் பலரும் தடுப்பூசியை அதிகமாக செலுத்திக்கொண்டு வருவதாகவும் இந்த இலையுதிர் காலத்தை எட்டும்போது 80% மக்கள் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தியை பெற்றிருப்பார்கள் என்றும் லொத்தர் வீலர் கூறினார்.