மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா? நாக்பூரில் முழு ஊரடங்கு
நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆயினும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்தவகையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாக்பூர் மாவட்டத்தில் கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒருவார கால முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.