பிலிப்பைன்ஸில் புதிதாக 2067 பேருக்கு கொரோனா தொற்று

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் புதிதாக 2067 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 5,80,442-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 47 பேர் புதிதாக பெருந்தொற்றால் இறந்துள்ளனர் இதனால் இறந்தோரின் எண்ணிக்கையானது 12,369-ஐ தொட்டுள்ளது. 144 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,34,463-ஆக அதிகரித்துள்ளது. 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 8 மில்லியன் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து தடுப்பு மருந்து வந்தடையடுத்து பிலிப்பைன்ஸானது கடந்த திங்கள் கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்துவதை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *