தழிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது.

Close-up medical syringe with a vaccine.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புவோருக்கு மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி ஒருவர் தனது பெயரை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் அல்லது நேரடியாக தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்றும் செலுத்திக் கொள்ளலாம்.அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோர் அரசால் குறிப்பிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தகுந்த ஆவணத்தை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் ஒருவர் கோவிட்-2.0 செயலியின் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். 45 வயதிலிருந்து 59 வயது வரை ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.529 அரசு மருத்துவமனைகளும், 761 தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டும் செலுத்தப்படுகிறது.திராவிட கழக தலைவர் கி.வீரமணி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *