இந்தோனேஷியாவில் புதிதாக 6680 பேருக்கு கொரோனா
இந்தோனேஷியாவில் புதிதாக 6680-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்தோனேஷியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 13,41,314-ஐ தொட்டுள்ளது.புதிதாக 159 பேர் தொற்றால் இறந்த நிலையில் இறந்தோரின் எண்ணிக்கையானது 36,325 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் 9212 தொற்றிலிருந்து மீண்டதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 11,51,915 ஆக அதிகரித்துள்ளதாக வெளியிட்டுள்ளது.கடைசி 24 மணி நேரத்தில் ஜகார்தாவில் 2058 பேரும்,மேற்கு ஜாவாவில் 1662 பேரும்,மத்திய ஜாவாவில் 657 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு கலிமண்டாலிலும்,மலுகுவிலும் புதிதாக தொற்று ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.