தென் கொரியாவில் புதிதாக 356 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் நோய் தொற்றிற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 89,676 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 117 பேர் சியோலில் இருந்தும் 139 பேர் க்யோங்கி மாகாணத்திலிந்தும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 22 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர்.புதிதாக 8 பேர் இறந்துள்ள நிலையில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 1603-ஆக அதிகரித்தது. மொத்த இறப்பு விகிதம் 1.79 சதவீதமாக உள்ளது.364-பேர் குணமடைந்த நிலையில் பெருந்தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கையானது 80,697-ஆக அதிகரித்துள்ளது.இதன் மூலம் குணமடைந்தோரின் சதவீதமானது 89.99 ஆக உயர்ந்தது.முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியானது பிப்ரவரி 26-ல் தொடங்கிய நிலையில் தடுப்பூசியானது இதுவரை 20,322 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…