மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்

இன்று புதன்கிழமை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் விரைவில் தேர்தலை மேற்கு வங்கம் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பான தேர்தலை உறுதிபடுத்தும்வகையில் கொரோனா தடுப்பூசியை துரிதமாக வழங்க வேண்டும் என வலிறுத்தியுள்ளார்.

தடுப்பூசியானது அனைத்து சுகாதாரத்துறையினருக்கும்,முன்கள பணியாளர்களுக்கும்,துப்புரவு பணியாளர்களுக்கும் விரைந்து செலுத்தப்பட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.மக்கள் பாதுகாப்பான முறையில் தேர்தலில் வாக்குசெலுத்துவதை உறுதி செய்ய அனைவருக்கும் துரிதமான முறையில் தடுப்பூசி செலுத்துவதை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.சுகாதாரத்துறை தரவுகளின்படி மேற்கு வங்கத்தில் தற்போது 3399 நபர்கள் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *