இரண்டாம் டோஸ் கொரனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மூன்று பேருக்கு மயக்கம் ; பொதுமக்கள் அச்சம்

இந்தியா முழுவதும் கொரனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், ஜனவரி 16 ஆம் தேதி போடப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தும் பணி இன்று தொடங்கியது.
இதனையடுத்து, தஞ்சையில் 220 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் மூன்று பேர் மயக்கமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு, தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மயக்கமடைந்துள்ளது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.