காளான் ஆம்லெட் செய்வது எப்படி…

பொதுவாக அனைவரும் என்னதான் வித விதமான பொரியல்களை உண்ணும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் முட்டை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பலரும் முட்டையை வேகவைத்து சாப்பிடுவதை விட ஆம்லெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். ஆம்லெட்டில் பலவகைகள் உண்டு, வெங்காய ஆம்லெட், சிக்கென் ஆம்லெட், மட்டன் ஆம்லெட், வெஜிடபிள் ஆம்லெட் , பிரட் ஆம்லெட் போன்ற பல வகை ஆம்லெட் நாம் உண்டிருப்போம். தபோது இந்தபதிவில் எனோகி காளான் ஆம்லெட்
செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எனோகி காளான் – 1 கட்டு
முட்டை – 3
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் எனோகி காளானை எடுத்து, அதன் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட வேண்டும். இந்த காளான் கொத்தாக இருப்பதால், ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் எனோகி காளானை பிரித்துப் போட்டு, சிறிது உப்பு தூவி பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், வெங்காயம், உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் எனோகி காளானை பேன் முழுவதும் தனித்தனியாக பிரித்து வட்டமாக பூ போன்று பரப்பி வைக்க வேண்டும். பின் அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். காளானில் இருந்து நீர் வெளியேறி காளான் ஓரளவு வெந்தது போன்று தெரியும் போது, முட்டை கலவையை மேலே ஊற்றி பரப்பி விட்டு சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். முட்டை வெந்தது போன்று தெரியும் போது, ஆம்லெட்டை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான எனோகி காளான் ஆம்லெட் தயார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…