கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி?

உணவுவகையில் அனைவரும் விரும்பும் ஒரு உணவு பச்சடி. அதில், அனைவருக்கும் தயிர் பச்சடிதான் தெரிந்த ஒன்னு. ஆனால் பலருக்கும் பீட்ரூட் பச்சடியை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. இது கேரளாவில் பேர் போன பச்சடி.இரும்புச்சத்து அதிகம் கொண்ட ஓர் காய்கறி தான் பீட்ரூட். இது இனிப்புச் சுவை கொண்டது. பலருக்கு இதை பச்சையாக சாப்பிட பிடிக்கும். பீட்ரூட்டைக் கொண்டு பொரியல், சாம்பார் என்று சமைக்கலாம். இது தவிர, பீட்ரூட்டைக் கொண்டு பச்சடியும் செய்யலாம். பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் – 1/3 கப்
வரமிளகாய் – 3
இஞ்சி – 1 இன்ச்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1

செய்முறை:
முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும். பின் பீட்ரூட்டை குக்கரில் போட்டு, சிறிது நீர் தெளித்து, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.பிறகு அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறிவிட வேண்டும். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள பீட்ரூட் பச்சடியுடன் சேர்த்து கிளறினால், கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி தயார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…