சுரைக்காய் பாயாசம் செய்வது எப்படி

பொதுவாக பாயாசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், இதில் சுரைக்காயை பயன்படுத்தி எப்படி பாயசம் செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
1 லிட்டர் பால்
1 கப் துருவிய சுரைக்காய்
1/4 கப் சீனி
2 தேக்கரண்டி கோயா
1 தேக்கரண்டி நெய்
தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
தேவையான அளவு சிரோஞ்சி
தேவையான அளவு உதிர்ந்த பாதாம்
தேவையான அளவு உதிர்ந்த பிஸ்தா

1.ஒரு பானில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ஃப்ரஷ்ஷான துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வதக்குங்க. சுரைக்காயை மெல்லிசாக துருவிக்கொண்டு அதிலிருந்து வடியும் கூடுதல் நீரை பிழிந்து எடுத்துடனும்.

2.இப்போது, ஒரு பானில் பாலை ஊற்றி காய்ச்சுங்க. பால் சுண்ட காய்ச்சி திக்கானதும், அதில் சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவிடுங்க

3.இப்போது, இந்த பாலில் கோவாவை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவிடுங்க. சாரைப்பருப்பு, பாதாம் பிஸ்தா மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நல்ல திக்கான கன்சிஸ்டன்சிக்கு வரும் வரை 5 நிமிடங்கள் கொதிக்க வைங்க.

4.அடுப்பை அணைத்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து கூலாகவோ பரிமாறுங்க.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…