மலாய் சிக்கன் கிரேவி செய்வது எப்படி

அசைவ உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சிக்கன் தான். எப்போதும் ஒரே மாதிரியாக சிக்கன் சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் சாப்பிடுவது மிக முக்கியம். அந்த வகையில் இப்பதிவில் ஸ்பெஷல் சிக்கன் மலாய் கிரேவி ரெசிபி எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 1. 1 கிலோ கிராம் கோழி
 2. 1 கப் மசித்த fried onion (birista)
 3. தேவையான அளவு கரம் மசாலா தூள்
 4. தேவையான அளவு இஞ்சி
 5. தேவையான அளவு புதிய கிரீம்
 6. தேவையான அளவு தயிர்
 7. தேவையான அளவு நெய்
 8. தேவையான அளவு உப்பு
 9. தேவையான அளவு முந்திரி
 10. தேவையான அளவு பாதாம்
 11. தேவையான அளவு தர்பூசணி விதை
 12. தேவையான அளவு கசகசா விதை
 13. தேவையான அளவு தேங்காய்
 14. தேவையான அளவு சிவப்பு மிளகாய்
 15. தேவையான அளவு பூண்டு பேஸ்ட்
 16. தேவையான அளவு இலவங்கப்பட்டை
 17. தேவையான அளவு ஏலக்காய்
 18. தேவையான அளவு வெள்ளை மிளகு பொடி

1.முலாம்பழம் விதைகள், கசகசா, தேங்காய், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும்.

2.ஒரு பாத்திரத்தில் உலர்ந்த மிளகாய், பிரிஞ்சி இலைகள், இலவங்கப்பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வேக வைக்க வேண்டும். அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, வெங்காய ப்யூரி சேர்த்து . 3-5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

4.அதில் 2 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகு தூள் மற்றும் வேக வைத்த சிக்கன் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

5.பின்பு இதில் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.

6.அதன் பிறகு ப்ரஷ் கிரீம்,தயிர் சேர்த்து கிரேவி நன்கு கெட்டியாகும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

7.இப்போது ருசியான மலாய் சிக்கன் கிரேவி தயார். இதனை நெய் சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…