பாரம்பரியம் வாய்ந்த விண்டலூ..!

விண்டலூ என்ற உணவு கோவா நாட்டின் பாரம்பரிய உணவு முறையில் ஒன்று. உலக நாடுகளில் இருந்து அனைவரும் கோவா தீவுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதால் விண்டலூ என்ற உணவு வகை உலக புகழ் பெற்ற ஒன்றாக மாறியது. அதிலும் குழந்தைகள் இடத்தில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது விண்டலூ.

என்னதான் கோவா மக்கள் அதை தங்களுடைய உணவு என்று சொல்லிக்கொள்ள விரும்பினாலும், இந்த உணவு போர்த்துகீசிய வழி வந்தது. 14 ஆம் நூற்றாண்டு,கோவாவில் போர்ச்சுகீசியர்கள் காலனி ஆட்சி அமைத்த போது அவர்கள் அறிமுகப்படுத்திய உணவு வகை தான் விண்டலூ.  ‘வின்ஹாத் அல்ஹோஸ்’ என்று பாரம்பரியமாக அழைக்கப்படும் இந்த உணவு நாளடைவில் கோவா மக்களால் விண்டலூ என்று பெயரிடப்பட்டது.

‘வின்ஹாத்’ என்றால் ஒயின் என்றும், ‘அல்ஹோஸ்’ என்றால் பூண்டு என்றும் பொருள். இந்த உணவு பாரம்பரியமாக பன்றி இறைச்சியுடன் சரியான அளவில் ஒயின் மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சுவை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே விண்டலூ என அழைக்கப்பட்டது. 

இந்த உணவு சிக்கன் மட்டன் வைத்து இன்றளவில்  சமைக்கப்படுகிறது என்றாலும் கோவா மக்கள் பன்றி இறைச்சி இல்லாமல் விண்டலூ சமைக்கப்படுவதை விரும்புவதில்லை.

இந்த உணவை தயார் செய்ய முதலில் வரமிளகாய் உடன் வினிகர் மற்றும் வெந்நீர் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு கரம் மசாலா பொருட்கள், இஞ்சி, பூண்டு மற்றும்  எடுத்து வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் 

இந்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள்  சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கிய பின் சிக்கன் சேர்த்து அதனுடன் நன்கு அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க மறக்கக்கூடாது. 

சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான  விண்டலூ தயார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…