செஸ்வான் சிக்கன் லாலிபாப் கிரேவி செய்வது எப்படி

 அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கனில் லாலிபாப் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். ஸ்கெஸ்வான் சிக்கன் லாலிபாப் ( Schezwan Chicken lollipop) ஸ்கெஸ்வான் சிக்கன் லாலிபாப் (Schezwan Chicken lollipop)இந்தோ சீனா உணவு வகைகளில் ஒன்றாகும். இது விருந்தினருக்கு ஏற்ற அற்புதமான ஸ்பெஷல் உணவு. இதன் சுவையும் மற்ற சிக்கன் ரெசிபியைவிட சற்று அதிகமாகவே இருக்கும். இந்த டிஷ் சற்று காரசார நிறைந்த உயர்ந்த வகை டிஷ்… இதனை எவ்வாறு செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 1. 1/2 கிலோ கிராம் கோழி கால்கறி
 2. 1 Numbers முட்டை
 3. தேவையான அளவு பச்சை மிளகாய் சாஸ்
 4. 1 கைப்பிடியளவு வெங்காயத்தாள்
 5. தேவையான அளவு சேசுவான் சாஸ்
 6. தேவையான அளவு சிவப்பு மிளகாய் சாஸ்
 7. 2 தேக்கரண்டி லைட் சோயா சாஸ்
 8. 1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
 9. தேவையான அளவு இஞ்சி
 10. தேவையான அளவு உப்பு
 11. தேவையான அளவு மைதா மாவு
 12. தேவையான அளவு அரிசி மாவு
 13. 1 தேக்கரண்டி சோள மாவு
 14. தேவையான அளவு நறுக்கிய பூடு
 15. தேவையான அளவு பச்சை மிளகாய்
 16. வெப்பநிலைக்கேற்ப தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

1.ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், சோயா சாஸ் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் ஸ்கீஸ்வான் சாஸ் சேர்த்து சில மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

2.சிக்கன் நன்கு ஊறிய பின்பு அதில் முட்டை, சோள மாவு,மைதா மாவு, அரிசி மாவு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து விட வேண்டும்.

3.ஊறவைத்த சிக்கனை எண்ணெய் பொன்நிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

4.பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி,அதில் பூண்டு,பச்சை மிளகா,ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் சாஸ் மற்றும் செஸ்வான் சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சோள மாவு கரைத்து அதில் ஊற்றி சிறிது தண்ணீரும் ஊற்றி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

5.பிறகு பொறித்த சிக்கன் துண்டுகளை கிரேவியில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். இப்போது சிக்கன் துண்டுகளுடன் கிரேவி கலந்து அருமையான சுவையை உண்டாக்கும்..

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…