சைவ ஈரல் செய்வது எப்படி?

காட்டுகின்றனர்.அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.எனவே காய்கறிகளை ஒதுக்கிவிட்டு சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை விருப்பமாக சாப்பிடுகின்றனர்.ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அசைவத்தை விட சைவ உணவுகளில் தான் அதிக ஆரோக்கியம் உள்ளது.அப்படி புரதச் சத்து அதிகம் நிறைந்த பச்சை பயிரில் இப்படி சுவையான சைவ ஈரல் கிரேவி செய்து எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பச்சைப்பயறு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
குழம்பு மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
சோம்பு – அரை ஸ்பூன்
மட்டன் மசாலா – முக்கால் ஸ்பூன்
எண்ணெய் – 7 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு – 1
பிரியாணி இலை – 1
உப்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
ஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

1.முதலில் ஒரு கப் பச்சை பயிறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பச்சை பயறுடன் அரை ஸ்பூன் உப்பு, பச்சை மிளகாய் மற்றும் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் 10 நிமிடம் ஆவி கட்ட வேண்டும்.பின்னர் இந்த பச்சை பயிறு மாவு வெந்ததும் வெளியே எடுத்து கத்தியை பயன்படுத்தி சதுர வடிவில் வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இது பார்ப்பதற்கு அப்படியே ஈரல் போன்று இருக்கும்.

3.பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

4. பிறகு 10 சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு அந்த பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

5.பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.பின்னர் இவற்றுடன் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மட்டன் மசாலா, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

6.பின்னர் இவை நன்றாக கொதித்ததும் இதனுடன் வேக வைத்த பச்சைப் பயிறு மாவு சேர்த்து நன்றாக கலந்து விட்டு இவை அனைத்தும் நன்றாக கொதித்து சற்று கெட்டியானதும் ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடியாக்கி அந்த பொடியை இவற்றுடன் சேர்த்து ,இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

7.பின்னர் இவை நன்றாக கொதித்ததும் இதனுடன் வேக வைத்த பச்சைப் பயிறு மாவு சேர்த்து நன்றாக கலந்து விட்டு இவை அனைத்தும் நன்றாக கொதித்து சற்று கெட்டியானதும் ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடியாக்கி அந்த பொடியை இவற்றுடன் சேர்த்து ,இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…