ருசியான மட்டன் ஸ்டூ..!

இன்றைய காலகட்டத்தில்  அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய  உணவாக அசைவ உணவுகள் மாறிவிட்டன. சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளுக்கே இங்கு மக்கள் அதிக ஆர்வமும் விருப்பமும் காட்டுகின்றனர். அசைவ உணவுகளில் கூட பல விதமான வித்தியாசமான ரெசிபிகளை சுவைக்க விரும்புகின்றனர். இதுபோல உணவில் சுவை தேடுபவர்களுக்கான ஒன்று தான் இந்த மட்டன் ஸ்டூ. 

நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சாம்பாரை விட இது போன்ற உணவுகளையே பலரும் விரும்புகின்றனர். 

இந்த மட்டன் ஸ்டூவை செய்வதற்கு தேவையான பொருட்கள் மட்டன், காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது,தேங்காய் பால், பட்டை, கிராம்பு, லவங்கம். 

மட்டன் மற்றும் காய்கறிகளை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, லவங்கம் மற்றும்  வெங்காயம்  சேர்த்து வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கொள்ளவும்.  நன்கு வதங்கிய பிறகு. மட்டன் மற்றும் காய்கறிகளை சேர்த்து அவை  வேக போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 

கலவை நன்கு வெந்து சுண்டிய பிறகு தேவையான அளவு  தேங்காய் பால் ஊற்றி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.  இந்த சுவையான மட்டன் ஸ்டூவை ஆப்பம்,தோசை,இட்லி உடன் சாப்பிடலாம்.   

 

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…