டெல்டா பிளஸ் கொரோனா வைரஸிற்கு இந்தியாவில் முதல் பலி!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது. அதில் 5 பேர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த ஐந்து பேரில் ஒருவர் தற்போது இந்த டெல்டா வகை கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸிற்கு பலியான முதல் உயிர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெல்டா வகை கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய பிரதேச மருத்துவத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.