ஜெப் பெசோஸை விஞ்சும் கெளதம் அம்பானி?

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு 1 பில்லியனே தேவை என்ற செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு $150 பில்லியன் ஆகும். கவுதம் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு $149 பில்லியன் ஆகும், அதாவது அவர் பெசோஸை விஞ்சி உலகில் 2வது பணக்காரராக வருவதற்கு $1 பில்லியன் தேவையாக இருக்கிறது.

நேற்று நடந்த பங்கு சந்தை வர்த்தகத்தில், சுமார் $2 பில்லியன் இழப்பை சந்தித்தார் ஜெப் பெஸோஸ். இதனால் அவருடைய தற்போது சொத்து மதிப்பு $150 பில்லியன் ஆகும். இந்நிலையில் நேற்று அதானி $4 பில்லியனுக்கும் மேல் லாபத்தை ஈட்டியுள்ளார்.அதன்படி கவுதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு $149 பில்லியன் ஆகும். அதாவது 2வது பணக்காரரான பெசோஸை விஞ்சுவதற்கு கவுதம் அடானிக்கு $1 பில்லியனே தேவை.


ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள ஐந்து பில்லியனர்களில் அதானியும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று, பிரெஞ்சு தொழிலதிபரான பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி உலகத்தின் மூன்றாவது பணக்காரரானார் கவுதம் அதானி. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஆசிய கண்டத்தை சேர்ந்த நபர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *