அதிகரிக்கும் கடன் சுமை: அதானி குழுமத்தை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்..!

இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்களை தொடர்ந்து மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் வரிசையில் தற்போது அதானி குழுமம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் அதானி குழுமத்துக்கு கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன் சுமை வணிக விரிவாக்கம், தொடர்பில்லாத வணிகங்களில் நுழைவது போன்ற குறித்து அபாய எச்சரிக்கை விடுக்கின்றது.

பல்வேறு கடன் நிலுவைகள், அதானி குழுமத்தின் அதிதீவிர விரிவாக்கப் பணிகள், போன்ற சுற்றுச்சூழல், சமூக, அரசு ரீதியான அபாயங்களை இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி : அதிக சொத்துகளை குவித்த இந்திய  செல்வந்தர் | Gautam Adani overtakes Mukesh Ambani to become India s biggest  wealth creator 2020 ...

எரிசக்தி, பல்வேறு பயன்பாடுகள், போக்குவரத்து என விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி மொத்த எரிவாயு மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் என பல நிறுவனங்களை ஒன்றிணைத்த அதானி குழுமம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதானியின் நிதி தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள கிரெடிட் சைட்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுவது என்னவென்றால், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கடன் நிதி பெற்று விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக எச்சரிக்கையுடன் கவனிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *