என்டிடிவி செய்தி நிறுவனத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..!

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது.  என்டிடிவி நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் அந்தஸ்து பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அதானி மீடியா குழுமம் தெரிவித்துள்ளது. தற்போது மேலும் 26% பங்குகளை கைப்பற்ற வெளிப்படையாக கோரியுள்ளது. ஜெஎம் பைனான்சியல் என்ற நிறுவனம் இந்த வெளிப்படையான வர்த்தகத்தை பேசி முடிக்க நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் கைகூடினால் அதானி குழுமத்துடன் என்டிடிவியின் பெரும்பாலான பங்குகள் வந்து சேரும். அதாவது 55.18% பங்குகளை வைத்திருக்கும் நிலை வரும். என்டிடிவியின் 38.55% பொது பங்குகளாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

NDTV -யைக் கைப்பற்ற அம்பானியின் நிறுவனத்தை பயன்படுத்திய அதானி - என்ன  நடந்தது? - Explained | Adani acquired Ambani's Company to Capture NDTV

இது குறித்து என்டிடிவி தனது இணையத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், என்டிடிவி எப்பொழுதுமே அதன் செயல்பாட்டில், அதன் இதழியலில் சமரசம் செய்வதில்லை. நாங்கள் எங்கள் பாணி இதழியலை பெருமிதத்துடன் தொடர்கிறோம். 

இந்த மொத்த பரிவர்த்தனையும் எவ்வித ஆலோசனையும் இல்லாமல் தகவலும் தெரிவிக்கப்படாமல் ஒப்புதல் பெறப்படாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

2009- 2010 ல் என்டிடிவி நிறுவனர்களான ராதிகா, பிரனாய் ராய் ஆகியோருடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசிபிஎல் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *