தொடர்ந்து  உயரும் விமானப் பயண கட்டணம்..!! அரசின் நிலைப்பாடு என்ன..?

விமானப் பயண கட்டணம் உயர்வு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர், எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்து விலை கை நழுவிப் போய் விட்டதா மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன என்ற கேள்விகளை எழுப்ப பட்டது.   

இதற்கு பதிலளித்துள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் விமானக் கட்டணங்கள் அரசு நிர்ணயிப்பது இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

பெயர்களைக் கொண்ட விமானங்கள் என்ன என்பதைப் பாருங்கள். விமானங்கள் என்ன:  வகைகள் மற்றும் பெயர்கள்

ஒவ்வொரு விமான நிறுவனம் செலவினம், சேவையின் தன்மை, நியாயமான லாபம், நடப்பில் உள்ள கட்டண அமைப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த விலை கட்டண அமைப்பு காலத்திற்கேற்ப, விமான எரிபொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு, மாற்றங்களுக்கும் ஆளாகியது. 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து பயணிகளின் நலனை பாதுகாக்கிறோம்.

ஏர் இந்தியா ஜனவரி 2022 இல் தான் விற்கப்பட்டது. ஆனால் விலை உச்சவரம்பு மே 2020 இல் இருந்து அமலில் உள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…