பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு விதித்த எஸ்பிஐ வங்கி..!!

பணம் எடுக்கும்போது ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. சைபர் குற்றங்களை தடுக்க இந்த நடைமுறையை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.

அதன்படி ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் அதே போல் ஓடிபி பதிவு செய்த பின்னே பணம் எடுக்க முடியும்.

இந்த நடைமுறையை விரைவில் அனைத்து வங்கிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மர்ம நபர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தடுக்கப்படும் என்று எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் விளக்கம் கூறுகையில் டெபிட் கார்டை ஏடிஎம் மெஷினில் செலுத்திவிட்டு ஏடிஎம் பின் நம்பரை பதிவு செய்த பின் நமக்கு தேவையான தொகையையும் குறிப்பிட வேண்டும். அதன் பின்  ரூ.10,000க்கு மேல் இருந்தால் ஓடிபி எண் கேட்கும்.  ஓடிபி எண்ணை ஏடிஎம் பதிவிட்ட பின் பரிவர்த்தனை பணம் கிடைக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.